Sunday, March 7, 2010

vidaiyilla vidugadhai

நான் ஒரு கதை சொல்ல போகிறேன். இதை பார்ப்பவர்கள் இந்த கதா பாத்திரத்தின் மேல் அனுதாபம் கொள்ள வேண்டாம்... அபிமானம் கொள்ளவும் வேண்டாம்... தங்கள் அபிப்ராயத்தை மட்டும் பகிர்ந்து கொண்டால் போதும்...
ஒரு பெண் தன் வாழ்வில் என்ன என்ன சந்தோஷங்களையும் துக்கங்களையும் அனுபவிக்கிறாள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று... இதை கண்டு யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம்... இப்படியும் கண்ணீர் சிந்தி இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டால் போதும்...
ஊர் பெயர் சொல்ல விரும்ப வில்லை... கதா நாயகியின் பெயர் சொல்லவும் விரும்பவில்லை... ஆதலால், ஊர் பெயர் மதுரை என்று வைத்து கொள்வோம்... கதா நாயகி அங்கு மீனாக்ஷி தானே...
மீனாக்ஷி தன் தை தந்தைக்கு திருமணம் முடிந்த பத்தாவது மாததிலயே பிறந்து விட்டாள்... அதிர்ஷ்ட தேவதை என்று அவள் அப்பா அவள் பிறக்கும் முன்பே அவளுக்கென தேவதைகள் அணியும் அங்கியை வங்கி வந்தார்.. அது மட்டுமல்லாது, குளிர் தாங்க போர்வை, காலனி, எல்லாம் பிரமாதம்... ஆனால் சேதி தெரியாது அவருக்கு அவள் மரண வாயிலின் படிக்கட்டிற்கு மிக அருகில் இருக்கிறாள் என்று... உடன் இருந்தவர்கள் எல்லோரும் அழுது கொண்டிருக்க, தான் வங்கி வந்த அனைத்தையும் ஒரு ஓர கிடப்பில் போட்டு விட்டார்... குழந்தைக்கு பால் வாய் வழியாக போவது வழக்கம்.. ஆனால் நம் மீனக்ஷிக்கோ அது மூக்கு வழியாகத்தான் சென்றது... அன்றே என்ன பவம் செய்தாலோ? பிறகு அறையும் குறையுமாக பிறந்து அதிசயம் படைத்த குழந்தை என அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் எல்லோரும் ஆச்சரிய பட்டனர்... வீடு வந்தால் மீனாக்ஷி... காலம் சென்றது... அவளுக்கு ஒரு தங்கையும் பிறந்தால். மீனாக்ஷிக்கு தன் தை தந்தை இவரில்லை வேறு இருவர் என்பது கடவுளால் நிச்சயிக்க பட்டிருக்கவே, அவள் தன் பெரியப்பா பெரியம்மாவிடம் வளர்ந்தால்... தன் மேல் அதிகம் அக்கறை செலுத்திய அவர்களை தான் தன் தாய் தந்தை என கருதினால் மீனாக்ஷி... இந்நேரத்தில் அவளின் தந்தை ஒரு விபத்தில் அடி பட்டு இறந்து விட்டார்... தன் தந்தை அவளுக்கு வங்கி கொடுக்காத பொருட்களே கிடையாது... அவர் அவளின் அம்மா வீட்டுக்கரர்களுக்கும் நன்றாகவே செய்தார்... ஊர் வெளிகள் செல்வது... வேண்டிய பொருட்களை உடனே வங்கி தருவது, இவற்றில் அவரை மிஞ்ச அந்த குடும்பதிலயே ஆட்கள் இல்லை எனலாம்... அவருக்கு தன் இரண்டாவது மகள் ருக்மணியை வட மீனாக்ஷி என்றல் மிகவும் பிரியம்... அவர் தன்னுடைய நடை உடை பாவனைகளில் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்... அவரின் மிடுக்கு அந்த ஊரில் முகவும் பிரசித்தம்... இப்படிப்பட்ட அப்பா இறந்ததில் மீனாக்ஷிக்கு மிகுந்த வருத்தம்... எறியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றினர் போல தன் தாயும் தனது தாய் வீட்டிற்கு செல்வதற்கு ஆயதமனால்... இதில் என்ன எறியும் கொல்லி என்று கேட்கிறீர்களா? அவள் செல்வது தன் இளைய மகள் ருக்மணியை மட்டும் தான் தன்னுடன் அழைத்து செல்வதாக இருந்தால்... தன் மூத்த மகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் எண்ணியது உண்மை தான்... அனால் அதில் மிகுந்த அக்கறை காட்ட வில்லை... எனவே மீனாக்ஷி தன்னுடைய பெரியப்பா பெரியம்மா உடனே தங்கினால்...ஏனென்றால் அவர்களுக்கு குழந்தை கிடையாது.. மீனாட்சியை தங்கள் சொந்த பிள்ளையாக வளர்க்க ஆசை கொண்டார்கள்... அம்மாவும் ஊர் சென்றால்... மீனாக்ஷி தன் அம்மா இல்லாமல் முதல் நாள் பள்ளி செல்ல தயார் ஆனால்... வீட்டு வாசலில் ரிக்ஷா வந்து நின்றது... சிரித்த முகத்துடன் டாட்டா சொன்னால்.. ரிக்ஷாவில் ஏறிய வுடன் பொறுக்க முடியவில்லை மீனாக்ஷிக்கு... கண்ணீர் குபீர் என பொங்கி வழிய துவங்கியது... தான் வாழ் நாள் முழுவதும் அழுவதற்கு ஒத்திகை பார்த்து கொண்டால் அன்று பாவும் அப்பாவி... பின் பள்ளியிலும் இதே நினைவுகள்... பள்ளி தோழிகளும் வகுப்பு ஆசிரியைகளும் மாறி மாறி துக்கம் விசாரித்தனர் மீனாட்சியிடம்... தாங்க மாட்டாமல் அழுத வண்ணம் இருந்தால்... அப்பொழுது தன் அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அவளுக்கு ஏசு கிறிஸ்துவை பற்றி அவளின் ஆசிரியர் உபதேசித்தார்... தனக்கு ஆறுதலாக தோல் சாய ஒருவர் கிடைத்து விட்டார் என்று நினைத்தாள்.... அன்று முதல் ஏசு தான் தன் கடவுள் என மனதில் பதித்துக்கொண்டால்.... தனக்கு ஏதும் சோகம் நேர்ந்தால் உடனே அதை ஆலயத்தில் உள்ள தெய்வத்திடம் கொண்டு செல்வாள்... சாப்பிடும் முன்பும் பின்பும் தெய்வத்திடம் தன் நன்றியை தெரிவிப்பது அவள் வழக்கம்... மீனாக்ஷியின் குரல் வளம்  அவளை பாட்டு பாட ஒத்துழைத்தது... தனது பள்ளியில் வந்த அனைத்து போட்டிகளிலும், அவள் கலந்து கொண்டால்... ஆனால் ஏதோ கரைந்தால், எந்த போட்டியிலும் அவளுக்கு வெற்றி கிட்டவில்லை... இருந்தும் மனம் தளராமல் முயற்சி செய்வாள்...நடுவர்கள் எல்லோரும் தனக்கு முன் நல்ல குரல் வளம் உனக்கு இன்னும் முயற்சி செய் என்று சொல்லும்போது பரிசு நிச்சயம் அவளுக்குதான் என்று நம்பிக்கையுடன் இருப்பால்..ஆனால், ஏதோ காரணத்தால் பரிசு கை நழுவி போய்விடும்...  இப்படியே பத்துக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தோல்வியுற்றால்...  விடுமுறை காலங்களில் தன் அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம்... அங்கு அவள் அம்மாவுக்கு துளசி என்ற பால்ய சிநேகிதி இருந்தால்... அவளுடையதும் சோக கதை தான்... அவள் ஒரு பாடல் ஆசிரியை... முப்பது வயதாகியும் திருமணம் ஆகவில்லை... அவளது வீட்டில் அரசாங்க உத்தியோக சம்பாத்யத்தை நம்பி இருப்பதால் அவளை திருமணம் செய்து கொடுக்க மனமில்லை ... அவள் தான் மீனாட்சியின் பாடல் ஆர்வத்தை அங்கீகரித்து, கர்நாடக இசை கற்று தரும் வகுப்பில் சேர்த்து விட்டால்... மீனாட்சியும் ஆர்வத்துடன் பாடல் கற்றால்.. அவளுக்கு எப்படா  முழு விடுமுறை விடுவார்கள் என்று இருக்கும்... ஏனன்றால் அப்பொழுது தானே, அவள் அவளுடைய அம்மா வீட்டிற்கு செல்ல முடியும்... அம்மா சமையலில் பலே கில்லாடி... பெரியம்மா சமையலை விட, அம்மா சமையல் என்றல் மீனாக்ஷிக்கு உயிர்... அதிலும் அவள் அசைவ பிரியை வேறு... எப்பொழுது பார்த்தாலும் அவர்கள் வீட்டில் அசைவ சமையல் இருக்கும்... தன மற்றொரு பெரியம்மாவின் மகன் பெயர் கண்ணா... மிகவும் நல்லவன்.... ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்காதவன்... மீனாக்ஷிக்கு அவன் என்றால் உயிர்... விடுமுறை காலங்களில், அவன் வீட்டிற்கும் இவள் செல்வாள்... அங்கு மீனாக்சியின் விளையாட்டுக்கு ஒரு அளவே கிடையாது... எப்பொழுது பார்த்தாலும் ஒன்று ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பால் அல்லது,பட்டு பூச்சி பிடித்து கொண்டிருப்பாள், அல்லது, காkiதத்தில் கப்பல் செய்து தண்ணீரில் விடுவாள்... அவளது இந்த பெரியம்மாவும் பெரியாபவும் மிக நல்லவர்கள்... பெரியம்மா அவள் குளிபதற்கென ஒரு தொட்டி நிறைய தண்ணீர் பிடித்து வைப்பாள் மீனாட்சியும் அவள் தங்கையும் அதில் குதித்து குதித்து விளையடுவார்கள்... இது அவர்களுக்கு மிகவும் பிடித்த இடம்... ஒரு நாள் அவள் மைதானத்தில், தன் அக்கா தங்கை ஆகியோருடன் விளையாடிக கொண்டிருந்தால்... அப்பொழுது அவர்களுக்கு ஒரு எண்ணம்... நம் குடும்பம் முழுதும் இங்கயே வந்து இந்த ஊரிலயே வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று... நடவாது என்று தெரிந்தும் அவர்கள் அந்த பகல் கனவை கண்டார்கள்... பாவம்.. அந்த ஊரில் பாம்புகள் மிக அதிகம்.... ஒரு நாள் மீனாக்ஷி, அங்கு இருந்த ஒரு கோவில அருகில் தன் தங்கை மற்றும் நண்பர்களுடன் விளையடிக்கொண்டிருந்தால்.. அப்பொழுது ஒரு நீளமான மலை பாம்பு சாலையை கடந்து சென்று கொண்டிருந்தது... மீனாட்சியும் அவள் தங்கையும் சாலையின் அக்கரையில் மாட்டி கொண்டனர்... பெரியவர்கள் அனைவரும் சாலையின் அக்கரையில்...... இவர்கள் இருவரும் இங்கு மாடி கொண்டனர்... அனைவரும் அங்கிருந்து கத்திகொண்டிருந்தனர்... பாம்பு சாலையை கடந்து சென்றதும் இவர்கள் இருவரும் அப்புறம் சென்று, அவர்கள் அச்சத்தை தனித்து கொண்டனர்... பின்பு ஒரு நாள் அங்கிருந்த மைதானத்தில்,  அவள் அண்ணன் தன் தோழர்களுடன் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தான்... அப்போது, மீனாக்ஷி ஒரு கல்லில் அமர்ந்து அதை பார்த்துகொண்டிருந்தால்... தெரியாமல் அந்த கல்லின் இடைவெளியில் தன் கையை விட்டு விட்டால்... அப்பொழுது அங்கிருந்த பூச்சி ஒன்று அவளுடைய கையை கடித்து விட்டது... உடனே அழுது ஊரையே கூட்டி விட்டால்... அவள் பெரியம்மா என்ன கடித்ததோ என்று பயந்து பொய் பார்வை பார்ப்பவர் ஒருவரிடம் அவளை அழைத்து சென்றால்... அந்த பாட்டி அவளுக்கு மருத்துவம் செய்தல்... இரவு முழுவதும் ஒரே அழுகை...  பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விட்டது... இப்படி அங்கிருந்த ஒவ்வொரு நாளும் மீனாக்ஷிக்கு புது புது அனுபவங்கள்... இந்த வாழ்வை தன் வாழ்வின் பொற்காலம் என அவள் கருதினால்...